logo

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம்

TamilNadu Pensioners' Association

logo


நமது பணிகள்

  • 1. ஓய்வு பெறவிருக்கும் அரசு அலுவலர்களும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் உரிய பலன்களை பெற உதவி செய்தல்.

    2. ஓய்வுபெற்ற அலுவலர் அல்லது பணியிலிருப்பவர் இறந்தால் தகுதிபெற்ற வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உதவுதல்.

    3. மாற்றுத் திறனாளிகள் / மனவளர்ச்சி குன்றிய அரசு அலுவலர்களின் வாரிசுகளுக்கும் இயலாமையில் உள்ள விதவை மற்றும் விவாகரத்து பெற்ற மகளுக்கும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற வழிகாட்டுதல்.

    4. தகுதியுள்ள ஓய்வூதியம் வழங்கப்படாமல் குறைவாக பெறுபவர்களுக்கு முறையான நடவடிக்கைக்கு வழிகாட்டி கூடுதல் ஓய்வூதியம் பெற உதவுதல்.

    5. கருவூலத் துறையினருடனும், ஓய்வூதியர்கள் பணிபுரிந்த துறை அலுவலர்களுடனும் நல்லுறவை ஏற்படுத்தி ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்ட குறைகளைக் களைந்திட உதவுதல்.

    6. ஓய்வூதியர்களுக்கு அரசுப் பணிக்காலத்தில் ஏற்பட்ட ஊதிய இழப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை போன்ற நிகழ்வுகளில் விதிமுறைப்படி நல்ல தீர்ப்பு கிடைத்திட உதவுதல்.

    7. நமது சங்க உறுப்பினராக உள்ள ஓய்வூதியர்களின் குடும்ப சுகதுக்கங்களில் "உதவும் கரமாக" பங்கேற்றல்.

    8. தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் உதவியோடு ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பெற்று தன்மானத்தோடு வாழ உதவுதல்

    9. கல்வியறிவற்ற குடும்ப ஓய்வூதியர்களின் பிரச்சனை களுக்குத் தீர்வு காண வழிவகுத்தல்.

    10. அரசாணைகளின் "புத்தக வங்கியை" உருவாக்கி, அரசு ஓய்வூதியர்களுக்கு தேவையான அரசாணை நகல்பெற உதவுதல்.

    11. பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் கருணை ஓய்வூதியத்தை கேரள அரசு வழங்குவது போன்று தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்கும் சலுகை வழங்கிட அரசுக்கு நாம் சமர்ப்பித்துள்ள கோரிக்கை மீது தொடர் நடவடிக்கை மேற்கொண்டு அரசாணை பெறுதல்.

    12. உறுப்பினர்களின் உடல்நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துதல்.

    13. ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை மாநில நிர்வாகிகள் வழியாக அரசுக்கு எடுத்துச் சென்று உரிய ஆணை பெறுதல்.

    14. மேற்கண்ட பணிகள், நாங்கள் ஆற்றும் பணிகளின் சில எடுத்துக் காட்டுகளே அன்றி, முழுமையான பட்டியல் அல்ல. இதில், குறிப்பிடாத நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுமானால் தகுந்தநடவடிக்கைஎடுக்கப்படும்என்று உறுதியளிக்கிறோம்.

    எங்களுடைய மாவட்ட மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் அனைவரும், ஓய்வூதியர்களுக்கு பணிபுரிந்திட காத்திருக் கின்றனர். ஓய்வூதிய நண்பர்களே! நீங்களும் எங்களுடைய சங்கத்தில் உறுப்பினராகி, உரிய பலன்களையும், பயன்களையும் பெற்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்துக்கு வலிமை சேர்த்திட வாரீர்! வாரீர்!

Top